Saturday, 24 August 2013

சாத்தந்தை குல வரலாறு :

கொங்கு வேளாளர் குலங்களில் தொன்மையும்,புகழும்,பீடும்,பொருமையும் மிக்க குலங்களில் சாத்தந்தை குலமும் ஒன்று.இலக்கிய ஏடுகளில் ‘மங்கைமணி சாத்தந்தை’, ‘கனிவு சாத்தந்தை’, ‘தாட்டிகன் சாத்தந்தை’, ‘பொருந்து சாத்தந்தை’, ‘தென்னர் சாத்தந்தை’, ‘பாவலர் சொற்பாடல் படைத்த சாத்தந்தை’, ‘வல்லமைசேர் சாத்தந்தை’ என்று பலவாறு போற்றிப் புகழ்துரைக்கப்பட்ட குலம் சாத்தந்தை குலம்.

‘சாத்தன்’ என்ற பெயர் பழங்காலத்தில் மிகவும் சிறப்புப் பெற்றதாக விளங்கியது. சாத்தன் வந்தான் என்றால் ஆண்பால் பெயர், சாத்தன் வந்தது என்றால் அஃறிணை கால்நடைகளில் ஒன்றிற்குப் பெயராகும்.பழங்காலதில் அரசர், மக்கள், புலவர் முதலிய பலர் சாத்தன் என்ற பெயரைப் பெற்றிருந்தனர்.

க,ச,த,ப முதன்மொழிச் சொற்களுக்கு எல்லா உரையாசிரியர்களும் கண்ணன்,சாத்தன்,தேவன்,பூதன் என்றே கூறுகின்றனர். சாத்தன் என்று பெயர் பெற்ற புகழாளனின் தந்தையைக் குலமுதல்வனாக கொண்டு வழிவந்தவர்கள் தங்களைச் சாத்தந்தை குலதினர் என்று கூறிக் கொண்டனர் எனலாம். தொல்காப்பியம் சாத்தன்+தந்தை என்ற இரு பெயர்கள் இணைந்து சாத்தந்தை என்று பெயராக மாரும் என்பதற்கு விதி கூறுகிறது. வே.ரா.தெய்வசிகாமணிக்கவுண்டர், கே.சி.சுப்பையா, டி.எம்.காளியப்பா, கு.சேதுராமன் ஆகியோர் சாத்தன்+தந்தை என்ற சொற்கள் இணைந்தே சாதந்தை என்ற குலப்பெயர் தோன்றியுள்ளது என்று கூறுகின்றனர்.

வி.இராமமூர்த்தி சாதந்தை என்ற பெயரைச் ‘சாத்தந்தை’ எனக் கொண்டு சாத்தன் குலமும் ஆந்தை குலமும் சேர்ந்து சாத்தந்தை குலம் ஆயிற்று என்று கூறுகிறார்.எந்த இடத்திலும் ‘சாத்தந்தை’ என்று இக்குலம் குறிக்கப்படவில்லை இரா.இரவிகுமார் , வி.இராமமூர்த்தி கூறுவதை ஏற்றுக்கொண்டு ஆந்தை கூட்டத்தொடு தொடர்புடைய சாத்தந்தை குலத்தினர் ‘ஆந்தைப் பாடி’ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்.

‘சாத்து’ என்பது வணிகக் குழுவைக் குறிக்கும் சொல்லாகும்.வணிகம் செய்வதில் ஈடுபட்டு வேளாளர்கள் சாத்தந்தை குலத்தார் என அழைக்கப்பட்டிருக்களாம் என்றும் கருதுகின்றனர்.சாத்தந்தை என்பது பழமையான பெயர்.கொடுமணல் அகழாய்விலும்,இடைகாலக் கல்வெட்டுகளிலும் ‘சாத்தந்தை’ என்ற பெயர் பல இடங்களில் பயின்று வந்துள்ளது.

சாத்தந்தை குலத்தினர் கொங்கு நாடெங்கும் பரவிப் புகழுடன் வாழ்ந்து வருகின்றனர்.பல்வேறு தனிதன்மையும்,சிரப்பும் உடையவர்கள்.முதன்முதலில் கொங்கு வேளாளர் குல வரலாறு எழுதிய டி.எம்.காளியப்பா பின்வருமாறு கூறுகிறார்.

‘சாத்தந்தை குலத்தினர் வீராதிவீரர்கள்,3000 ஆண்டுக்காலமாகத் தொடர்ந்து வீராதிவீரர்களாக இவர்கள் வாழ்ந்து வருவது ஒரு அதிசயமாகும்.ஒரு தலைமுறையில் வீரர்களாக இருப்பவர்க்ள் சில தலைமுறையில் கோழைகளாக மாறிவிடுவது வரலாற்று இயல்பு.சாத்தந்தை குலத்தினர் தொடர்ந்து காலத்திற்குக் காலம் வீரத்திணவுடன் வாழ்ந்து வருவது கொங்கு இனத்திற்கே பெருமை தருவதாகும்.’ என்பது டி.எம்.காளியப்பா கூறும் தொடர்களாகும்.

சாதந்தை குலத்தாரில் சிலர் பொங்கல் வைப்பதில்லை.சிலர் விசேடங்களுக்குப் பந்தல் போடுவதில்லை.கொங்கு மண்டலப் பாளையக்காரர் பட்டக்காரர்க்கு உற்றுழி உதவி செய்துள்ளனர்.மன்னர்களின் வெற்றிக்குக் காரணமாக விளங்கிப்பட்டமும்,பதவியும்,விருதும் பெற்றுள்ளனர்.

காணியூர்கள்:

வெள்ளோடு புதுநகர் நல்லண்வேள் காதல் வெள்ளோடு, நாகம்பள்ளி, கூகலூர், விசயமங்கலம் ,குன்னதூர், அல்லாளபுரம், கூடலூர், உகாயனூர், காங்கயம், இலவமலை, பாலத்தொழு, கருவலாம்பாடி, காரைத்தொழு, அத்தாணி, அல்லிபுரம், வல்லிபுரம் முதலிய ஊர்களைக் காணியூர் என்று கூறுகிறது.

“வெள்ளோடை ஆம்பல்களும் மெய்நளின மாமலர்சூழ்
வெள்ளோடை யும்பரவும் வெள்ளோடை யம்பதியும்
நாகநகர் கூவலூர் நல்விசைய மங்கையுடன்
சேகரம்சேர் குன்றைநகர் செப்பும்அல் லாளபுரம்
கூடலூர் உகாயனூர் கொள்ளஅருள் காங்கயமும்
நீடுஇல வன்மலையும் நேயமிகும் பாலைநகர்
நற்கருவ லாம்பாடி நன்னகராம் காரைத்தொழு
சொற்குலவும் அத்தாணித் தொன்னகரும் நன்னயமாம்
அல்லி புரத்துக்கு அதிபர் புகழ்நிறைந்த
வல்லிபுரம் என்னும் வளநகரும் மேன்மைகொண்டோன்
இன்னும் பலகாணி இன்பமுட னேபடைத்த”-சாத்தந்தையார் என்று அந்நூல் புகழுகிறது.

அலகுமலை குறவஞ்சி பொங்கலூர் நாட்டின் காணியாள்ர்களில் ஒருவர் சாத்தந்தை குலத்தினர் என்று கூறுகிரது.முத்துசாமிக்கோனார் தம் கொங்குநாடு என்னும் நூலில் (1993) மேள்கரைப் பூந்துரை நாட்டில் வீரகநல்லூர், ஓடாநிலை ஆகிய ஊர்களைச் சாத்தந்தை குலத்தாரின் காணியூர்கள் என்பார்.

சில தனிப்பாடல்களில்,

“உகாயனூர் வாய்த்த சாத்தந்தை”
“ஆத்திப நல்லூர் அதிபர் சாத்தந்தை”
“திசைக்குமது தென்னாகம் வெள்ளோடை அல்லாளம்
நிருபன் சாத்தந்தை குலனே”

என்ற காணிகள் கூரப்பட்டுள்ளன.ஆத்திபநல்லூர் சாத்தந்தை குலத்தாரின் முதல் காணியாகும்.விவசாயப் பெருக்கத்தாலும்,தொழில், வணிகம், பணிகள் காரணமாகக் காணியூர்கள் பெருகின.

பெற்ற சிரப்புகள்:

செயற்கரும் செயல்களும் புரிந்த சாத்தந்தை குலத்தார் தமிழக அரசர்களாலும், ஆட்சியாளர்களாலும் பெற்ற சிற்ப்புகள் பலப்பல. ஒருமுறை சங்கரண்டாம்பாளையம் பெரியகுலவேணாடுடையார், வெள்ளோடு சத்தந்தை குல உடையார், காரை ஆனூர்ப் பயிர குலச் சர்க்கரை மன்றாடியார், பூந்துறைக் காடை குல நண்ணாவுடையார் ஆகியோருக்குக் கரூரில் மூவேந்தரும் சேர்த்து முடி சூட்டினர் என்று புலவர்கள் பாடியுள்ளனர்.

“வேணா டுடையான் வெள்ளோடு உலகுடையான்
ஆனூர்க்குச் சர்க்கரை மன்றாடி – வேணுபுகழ்
நாவேந்து பூந்துறைசை நண்ணா வுடையார்க்கு
மூவேந்தர் சூட்டும் முடி”

என்பது அதைக் குறிக்கும் பாடலகும்,

திருமலை சரவண மன்றாடி என்ற சாத்தந்தை குலச் சான்றோர்க்கு முடிசூட்டு விழாவில் பாடிய பாடல்:

“திசைபரவு கலியுக சகாத்தநா லாயிரம்
இருநூற் றெழுபத்தினில்
சென்ரகர வருடம் ஆவணி பத்தினில்
செம்பொன்மா முடிசூட்டியே
மசச்சோழன் இம்முடிப் பாண்டியன் சேரனும்
மன்னர்கள் முன்பாகவே
வார்த்தையது தவறாத சாத்தந்தை நீயென்று
வளர்உலக மன்றாடியார்
விசையுற்ற நாகநகர் வெள்ளோடு காங்கயம்
காரைதொழு பாலைமேடு
உகாயனூர் மங்கையில் அல்லள் புரமதில்
வேளமனு நீபடைத்தாய்
அசையாத யோகனாம் காலிங்கன் திருமலை
அன்புபெத்த மகீபன்
ஆமூரு திருமலை சரவண மன்றாடிக்கு
அழகுமுடி சூட்டினாரே”-என்பதாகும்.

இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் மற்றொரு பாடல்,

“கொங்கினில் கலியுகம் சகாத்தநா லாயிரம்
இருநூற்று ஏழுபத்தில்
குலோத்துங்கசோழனும் சேரனும் பாண்டியன்
குலமது வகுக்கும்நாளில்
மங்கைமணி சாத்தந்தை__??__??_______
வரிசைப்பட் டம்தரித்து
மன்னுகர வருடம் ஆவணி பத்தினில்
வாய்ந்தசெவ் வாய்க்கிழமையில்
கங்ககைகுலக் காலிங்க ராயவெள் ளோடு
காங்கயம்விசய மங்கைநகரம்
காரைதொழு பாலதொழு அல்லாள புரமதில்
கடகம்எனும் யானைகட்டி
முன்கையில் சந்தனம் உரைத்ததே வணன்உதவ
முத்துபெத்தா மகீபன்
முனைபெற்ற திருமலை சரவணமன் றாடிக்கு
மூவர்முடி சூட்டினர்களே”--என்பதாகும்.

இவ்விரு பாடல்களிலும் சில காணியூர்கள் கூறப்பட்டுள்ளன.

மேற்கண்ட பாடல்களில் சாத்தந்தை குலத் தலைவர்கட்கு ‘மன்றாடி; பட்டம் அளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.சேர மன்னன் வேண்டிக்கொள்ள உறையூர்ச் சோழன் ஓதாள குலம் பெரிய பெருமானை வேட்டுவரை அடக்குதற்பொருட்டுப் பொங்கலூர் நாட்டுகு அனுப்பினான்.பொன்னர், சாத்தந்தை, செம்பொன், குழாயர் குலத்தினரும் படையுடன் துணைக்கு வந்த்தனர்.சாத்தந்தை குலத்தினர் வெற்றி பெற்று உகாயனூர்க் காணி பெற்றதுடன் ‘மன்றடியார்’ பட்டம் பெற்றனர்.பின்னர் வழிவந்த பலரும் அப்பட்டத்தைத் தங்கள் பெயருடன் இணைத்துக் கொண்டனர்.

சங்க கால வள்ளல் இருங்கோவேள். புலிகடிமால், அவர்கள் வழியினரான துவாரசமுத்திரப் போசளர் ஆகியோர் சத்தந்தை குலத்தினர் என்று க.பழனிசாமிப் புலவர் கூறுகிறார்.வெள்ளோட்டை ‘வெள்ளூறந்தை’ எங்கிறார்.இவை சிறப்பேயெனினும் இவற்றிற்க்கு சான்றுகள் ஏதும் இல்லை.

-தொடரும்- 

குலம் பிரித்தல்:
கொங்கு மண்டலத்தில் நற்குடி நாற்பதத்தெண்ணாயிரம் பேரும்.பசுங்குடி பன்னீராயிரம் பேரும் குடியேறியபோது 24 நாட்டுக்கும் காணியூர்கள் ஏற்படுத்தி அவ்வூர்கட்குரிய குலத்தார் யார் யார் எனப் பிரித்தலில் சாத்தந்தை குலத்தாரே முன்னின்றனர்.இதனை தனிப்பாடல் விளக்குகிறது.

“சேரன் சோழன் பாண்டியன் மூவராசாக்களும்
செங்கோல் செலுத்துநாளில்
செம்பொன்முடி வைக்கவரும் கங்கைகுல வந்கிஷம்
செழியர்திசை மூவர்தான் பிரிக்க
பார்மருவு காராளர் நாற்பத்தெண் ணாயிரம்
பசுங்குடிகள் பன்னிராயிரம்
பகுக்கவரு சாத்தந்தை”
என்பது அப்பாடல் பகுதியாகும்.

கம்பருக்கு அடிமையானவர்கள்:

சோழனோடு மனம் மாறுபட்டுக் கொங்கு நாடு வந்த கவிச் சக்கரவர்த்தி கம்பரைக்கொங்கு வேளாண் பெருமக்கள் வரவேற்று உபசரித்து ஆதரவு தந்தனர்.கம்பருக்குப் பல்லக்குச் சுமந்து,அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து,எச்சில் காளாஞ்சி ஏந்தி,பாதச் செருப்புகளைத் தலைமேல் கொண்டு பணிபுரிந்தவர்கள்கொங்கு வேளாளர்கள்.சாத்தந்தை குலத்தாரும் கம்பரை மதிக்கத் தவறவில்லை.

வெள்ளோட்டில் வாழ்ந்த சாத்தந்தை குலக் கந்தயகவுண்டர் பேரனும், நல்லைய கவுண்டர் மகனுமாகிய முத்தைய கவுண்டர் என்பவர் கல்லும் காவிரியும் சந்திரனும்சூரியனும் உள்ளவரை பரம்பரையாக நாங்கள் கம்பருக்கு அடிமையாவோம் என்று எழுதித்தந்தனர்.இதனை,

“கல்லும் காவிரியும் சந்திராதித்தர் உள்ளமட்டும்
கம்பநாடன்
சொல்லிய செந்தமிழ்க்கு அடிமைதுரை நாங்கள் என்ற
சோமாபூமேல்
வல்லமைசேர் வெள்ளோடை சாத்தந்தை கந்தயவேல்
மைந்தன்கீர்த்தி
நல்லயவேல் ஈன்றெடுத்த முத்தைய மகிபதியே
நளினமாலே”
என்ற பாடல் விளக்குகிறது.

சடையப்ப வள்ளல் :

கம்பரை வளர்த்து கல்வியல் பெரியவர் ஆக்கி சோழனுக்கு அறிமுகம் செய்துவைத்து அவைக்களப் புலவராக்கி இராமாயணம் பாடக் காரணமாக இருந்தவர் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பவள்ளல் கொங்கு வேளாளரில் சாத்தந்தை குலத்தினர் என்பது மிகவும் பெருமைக்குரிய செய்தியாகும்.

“சாத்தந்தை கோத்திரன் பண்ணை குலோத்திரன் தமிழ்ச்சடையன்
கோத்திரம் நாற்பத்தெண் ணாயிரம் என்னும் குலம்விளங்க
ஆத்திப நல்லூர் கலியுகம் ஆயிரம் இம்பத்தொன்றில்
வாழ்த்துவர் கங்கையின் வந்கிசத் தோர்கொங்கு மண்டலமே”

என்பது வாலசுந்தரக் கவிராயரின் கொங்கு மண்டலக் சதகப் பாடலாகும்.எப்படலில் சடையப்ப வள்ளல் சாத்தந்தை கோத்திரம் என்று கூறப்பட்டுள்ளது.பண்ணை குலேந்திரன் என்றால் பெரும் பண்ணையத்துக்குரியவர் என்பது பொருளாகும்.வாலசுந்தரக் கவியரசர் தன் சதக இரண்டாம் பாடலில் ‘சாத்தந்தை கோத்திரம் பண்ணைகோன்’ என்று கூறுவார்.மேற்கண்ட பாடலில் ‘ஆத்திப நல்லூர்’ கூறப்பட்டுள்ளது.ஆத்திபநல்லூர் சாத்தந்தை குலத்தாரின் பூர்வீகக் காணியூர் ஆகும்.அலகுமலைக் குறவஞ்சி ‘ஆத்திபநல்லூர் அதிபர் சாத்தந்தை’ என்று கூறும்.

சதகம் பாட வைத்தல்:

வாலசுந்தரக் கவியாருக்குப் பொன்னும் பொருளும் கொடுத்துக் கொங்கு மண்டல சதகம் பாடுமாறு கூறியதே சாத்தந்தை குலச் சடையப்ப வள்ளல்தான்.இதனை நூலாசிரியர்,

“இடுக்குவர் பிள்ளை தன்னை இறங்கினும் இருக்கார்என்று
வடித்தமிழ் நூலின் ஆசான் வாலசுந் தரம்யான் சொன்னேன்
படிக்கவே பொருட்சாத் தந்தை பண்ணைகோன் வெண்ணெய் நல்லூர்
கொடுத்திடும் இரணம் வாரிக் கொங்குசெய் சதகம் தானே”

என்ற கொங்கு மண்டல சதகப் பாடலில் குறிப்பிடுகிறார்.